Our Beliefs


God

We believe in the Father, the Son and the Holy Spirit.(Deuteronomy 6:4, Mathew 28:19, II Corinthians 13:14)

Holy Bible

We believe that all scripture was given by the Holy Spirit. It is perfect. Holy Bible has ultimate authority over our faith and practical life. Bible was written by holy men with the guidance of Holy Spirit. A single book containing sixty six books.
(II Timothy 3:6, Hebrews 4:12, II Peter 1:20-21, I Thessalonians 2:13)

Man

Man was created in the image of God. Man lost this image due to sin in the garden of Eden. Now he is not able to save himself from eternal punishment on account of his own deed.
(Genesis 1: 27, Philippians 2:6, I John 4:9-10)

Salvation

we believe that we are saved by grace through faith. As the Lord Jesus Christ gave Himself as a sacrifice for our sake and this made us fit to receive forgiveness of sin from God and to stand before God as righteous men.
(Romans 3: 23-26, Ephesians 2:8-9)

The Church

We believe that those who are born again by their faith on Lord Jesus are sealed by Holy Spirit who dwells in them. The Church is not an organisation, rather born again believers constitute the church. We believe by the word of God that all believers are priests. Those who are priests in this way are free to worship and serve God with Lord Jesus as head.
(Ephesians 1:20-23, Colossians 1:18, I Peter 1:18-23, I Peter 2:4-5)

Commandments

We believe we must obey the 2 commandments given by Lord Jesus Christ to the church

1.Those who are born again in Jesus Christ must be baptised

2.They must take part in Lord’s table

(Mathew 28:19-20, Acts 8:35-38, I Corinthians 11:23-25)

Gospel

We believe that preaching Gospel is the only way to be redeemed from sin and be reconciled with God. We also believe it’s the duty of every child of God to preach the Gospel.
(Mathew 28:19-20, I Peter 3:15, II Corinthians 5:2, Mark 16:15)

Future

We believe that Lord Jesus will come in mid sky to gather his own people (I Thessalonians 4:3-17) We believe in the bodily resurrection of the righteous and unrighteous (I Corinthians 15:54, Revelation 20:11-15) We believe that Christ come in glory to establish His kingdom publicly
(Mathew 28:19-20, I Peter 3:15, II Corinthians 5:2, Mark 16:15)

நாங்கள் விசுவாசிப்பது


தேவன்:

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறோம்.
(உபாகமம் 6:4; மத்தேயு 28:19; 2 கொரிந்தியர்: 13:14)

பரிசுத்த வேதாகமம்:

வேதவாக்கியங்களெல்லாம் ஆவியானவரால் அருளப்பட்டது என்று விசுவாசிக்கிறோம். அது குறைவற்றது. விசுவாசிப்பதற்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இறுதி அதிகாரமிக்கது பரிசுத்த வேதாகமமே. பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் படி பரிசுத்த மனிதர்களால் எழுதப்பட்டது வேதாகமம். அறுபத்து ஆறு புத்தகங்களை உள்ளடக்கிய ஒரே புத்தகம்.
(2 தீமோத்தேயு 3:16; எபிரெயர் 4:12; 2 பேதுரு ; 1:20-21; 1 தெசலோனிக்கேயர் ; 2:13)

மனிதன்:

மனிதன் தேவ சாயலில் படைக்கப்பட்டவன். ஏதேன் தோட்டத்தில் பாவத்தின் நிமித்தம் அச்சாயலை இழந்தான். இதனால் ஏற்பட்ட நித்திய தண்டனையிலிருந்து, தன்னுடைய செயலால் தன்னை தானே இரட்சித்துகொள்ள இயலாதவனாக காணப்படுகிறான்.
(ஆதியாகமம் :3; ரோமர் ; 3:23 ; எபேசியர் ; 2:8,9)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து:

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நித்திய தெய்வீகத்தை விசுவாசிக்கிறோம். அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன், மனுகுலத்தை பாவத்திலிருந்து மீட்க கன்னியின் மூலமாக பிறந்தார். அவரின் மரணமும் உயிர்தெழுதலுமே நாம் இரட்சிப்பை அடைகிற ஒரே வழி.
(யோவான்: 1: 1,14: பிலிப்பியா : 2:6 -8,1 யோவான்:4:9-10)

இரட்சிப்பு:

கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்படுகிறோம் என்பதை விசுவாசிக்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு பதிலாக தன்னை பலியாக ஒப்புக்கொடுத்ததே பரிசுத்த தேவனிடத்திலிருந்து மன்னிப்பை பெறவும் அவருக்கு முன் நீதிமானாக நிற்பதற்கும் தகுதிப்படுத்துகிறது.
(ரோமர் : 3:23-26 ; 6:23 எபேசியர்: 2:8-9)

திருச்சபை:

கர்த்தராகிய இயேசுவின் மீது கொண்டுள்ள விசுவாசத்தினால் மறுபடி பிறந்தவர்கள், பரிசுத்த ஆவியானவரால் முத்திரை போடப்பட்டு அவர்களுக்குள் வாசம் பண்ணுகிறார் என்பதை விசுவாசிக்கிறோம். திருச்சபை என்பது ஒரு அமைப்பு அல்ல, மாறாக, மறுபடி பிறந்த விசுவாசிகளே திருச்சபையாக இருக்கிறார்கள். வேதவாக்கியத்தின் அடிப்படையில் அனைத்து விசுவாசிகளும் ஆசாரியர்கள் என்று விசுவாசிக்கிறோம். இப்படி ஆசாரியர்களாக இருப்பவர்கள் உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவை தலையாக கொண்டு தேவனை ஆராதிப்பதற்கும் சேவிப்பதற்கும் விடுதலை உடையவர்களாக இருக்கிறார்கள்.
(எபேசியர் :1:20-23, கொலேசயரீ : 1:18; 1 பேதுந :1:18-23; 2:4-5)

கட்டளைகள்:

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய திருச்சபைக்கு கொடுத்த இரண்டு கட்டளைகளை அவரின் வருகைமட்டும் கடைப்பிடிப்பதை விசுவாசிக்கிறோம்.

1. இயேசு கிறிஸ்துவில் மறுபடி பிறந்தவர்கள் அனைவரும் திருமுழுக்கு பெற வேண்டும் என்பதும்,

2. கர்த்தரின் பந்தி அனுசரிக்கபடுவதுமே.

(மத்தேயு ;28:19-20; அப்போஸ்தலர் 8:35-38; 1 கொரிந்தியர் : 11:23-25)

சுவிசேஷம்:

மனிதன் பாவத்திலிருந்து விடுதலை பெற்று தேவனோடு ஒப்புரவாகிறதற்கு சுவிசேஷத்தை பிரசங்கிப்பதே ஒரே வழி என்று விசுவாசிக்கிறோம். சுவிசேஷத்தை பிரசங்கிப்பது ஒவ்வொரு தேவபிள்ளையின் தலையாய கடமை என்பதையும் நம்புகிறோம்.
(மத்தேயு ;28:19-20, 1 பேதுரு ;3:15;2 கொரிந்தியர் ;5:20 மாற்கு ;16:15)

வரும் காலம்:

கர்த்தராகிய இயேசு தாமே, தம்முடையவர்களை சேர்த்துக் கொள்ள மத்திய ஆகாயத்தில் வருவார் என்பதை விசுவாசிக்கிறோம் (1 தெசலோனிக்கியர் ;4:3-17) சரீர உயிர்தெழுதலை (நீதிமான், துன்மார்க்கர்) விசுவாசிக்கிறோம்.
(1 கொரிந்தியர் 15:51-54 ;வெளிப்படுத்தின விசேஷம் :20:11-15) கிறிஸ்து மகிமை பொருந்தினவராய், தம்முடைய ராஜ்ஜியத்தை நிறுவ வெளிப்படையாக மறுபடியும் வருவார் என்பதை விசுவாசிக்கிறோம்.
(பிலிப்பியர் :2:9-11 ; 2 தெசலோனிக்கேயர் :1:6)